பச்சை மலைப் பயணம் – 2

சந்திப்பது தானே நமது நோக்கம்? பின் எதற்கு இந்த பயணம்?

அதுவும் சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு இடத்தைத் தேடி?
இருக்கும் இடத்தில் இருந்தால் போதாதா?

இப்படி எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் எழலாம்.

அப்படி நிகழ்ந்திருந்தால் – பார்த்தோம், பேசினோம், பரவசமானோம், பின் பிரிந்தோம் என்று சில மணி நேரங்களும் கழிந்திருக்கும் அதற்குள் என்ன சாப்பிடுவது எங்கு சாப்பிடுவது போன்ற ஆராய்ச்சியில் நமது நோக்கம் முழுமை பெறவும் முடியாது.

பின்னர் வழக்கமான வாழ்க்கைச் சுழல் எனும் வலையில் விழ வேண்டும்.

எனவே தான் இந்த முயற்சி!

ஆனால் முதல் முயற்சியே முழு வெற்றி!

அடுத்ததாக பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் அன்புத்தோழி லதாவின் மேலான ஆலோசனையின்படி பசுமையான நினைவுகளை உருவாக்க உகந்த இடம் பச்சை மலை என்றும் பயண தினங்கள் நவம்பர் 26 மற்றும் 27 என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பயணிப்போர் எண்ணிக்கை அட்டமாசித்தி போல் எட்டு பேர்.

ஆனால் ஆசைகள் ஆயிரம் இருந்தாலும், சோதனைகள் பல்லாயிரம்!

அப்படி என்ன சோதனை?

அதை அறிந்து கொள்ள, இந்த இடைவெளியும் ஒரு குட்டி சோதனை !

உடனே சொல்லி விட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடுமே!

இந்த இடத்தில் நடிகர் திலகத்தின், ‘ராஜா ‘ படப் பாடல் ‘ நீ வரவேண்டும் என ‘ ….. துணைக்கு வருகிறது.

‘காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு! காக்க வைப்பதில் சுகம் உண்டு ‘!

காத்திருப்போமே!

2 Comments

  1. இனிமையான பயணம்… நானும் தொடர்ந்து பயணிக்கிறேன்!

    Like

  2. Adhi Venkat says:

    உங்கள் பயணத்தில் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.. தொடர்கிறோம்.

    Like

Leave a Comment