Home

My Latest Posts


  • அர்த நாரீஷ்வர நாள் 08.03.2024
    வேதநாயகனின் பாதியாகி, யாதுமாகி நிற்பவள்!சோதனைகளைச் சாதனைகளாக்க ஆதரவாய் இருப்பவள்!காதலித்துக் கரம் பிடித்த மாதொரு பாகனின் மகத்தான நாளின்றும் தோதென இணைந்து அருள்பவள்!மாதவன் சோதரி மாதவள் பாதங்களைப் பணிந்தே போற்றுவோம்! இந்த ஆண்டு மகளிர் தினத்தில், சிவராத்திரியும் இணைந்தது சிறப்பே!
  • ஸ்வாசமே வாசமே!
    கடற்கரை ஓரம் காற்று வாங்கப் போய், கடும் சளியை வாங்கி வந்தேன். நாசிகா மண்டலம் தாழ்வு மண்டலப் பகுதியாக மாறி, அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கப் பட்ட பிராந்தியம் ஆகி விட்டது. மூக்கு, குற்றாலமாக மாறி விட்டது. விளைவு, வாய், வாயு தேவனின் வாசஸ்தலமாக மாறி, ஆரோஹனம், அவரோஹணம் என ஸ்வர சஹித உறக்கம். இரவு முழுதும் அழுது, என் இரண்டு கண்ணும் பழுது என்பது, காலையில், கண்ணாடியில் தெரிந்தது. மேலும், பரிசாக, தொண்டையில் ஒரே கரகரப்ரியா சஞ்சாரம்.Continue reading “ஸ்வாசமே வாசமே!”
  • வருக வருகவே 2024
    அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்! 2023 இன் இறுதி நாளில் நன்றியாகவும், 2024 இன் தொடக்கத்திற்கு நல்ல முகவரியாகவும், நல்லதொரு அனுபவம் கிட்டியது. பொங்கல் நாட்களில், கோவையில் குமாரி ஸ்பூர்த்தி – யின் நிகழ்ச்சி இருப்பதைப் அறிந்து, ‘ அடடா கோவையில் இப்போது இல்லையே ‘ என்று ஆதங்கப் பட்டேன். ஆனால் கடவுள் மிகவும் கருணை உள்ளவர் என்று புரிய வைத்தார். இன்று எதிர்பாராத விதமாக, பாண்டியில், அவரது நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிய வந்ததால்Continue reading “வருக வருகவே 2024”
  • மார்கழியில் சில பார்வைகள்!
    புள்ளின் வாய்க் கீண்டானை, – என்பது பகாசுரனைக் குறிப்பது புரிகிறது. ஆனால், அதென்ன, பொல்லா அரக்கனை – என்ற அடைமொழியுடன் கூடிய பதம், இராவணனைக் குறிக்க பயன் படுத்தப் பட்டுள்ளது? அரக்கன் என்றாலே பொல்லாதவன்தானே? பின் எதற்கு அந்தப் பிரயோகம்? அங்குதான் ஆண்டாளின், மொழியருமை தெரிகிறது. அதே கால கட்டத்தில், விபீஷணன் என்ற ஒரு நல்ல அரக்கனும் இருந்ததால், இராவணனை, ‘ ‘பொல்லா ‘ என்ற அடைமொழியுடன் விளக்கி உள்ளாள். அது மட்டுமல்ல, தன் வயதுக்கே உரித்தானContinue reading “மார்கழியில் சில பார்வைகள்!”
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – பாரதி பிறந்தநாள்!
    நாமகள் அருளாலே நயமான சொல்லெடுத்துப்பாமாலை பலவியற்றி பலராலும் பாடிமகிழ்பூவுக்குள் தேனாகப் புவியுளோர் அருந்தியேகோமகனைக் கொண்டாடவோர் குதூகலத் திருநாள்! நரிபோல நுழைந்து நம்நாட்டை ஆண்டவனைப்பரிவேக முழக்கப் பாடல்களால் பலரோடும்அரிபோல் முழங்கியே அதிர்வடையச் செய்தவன்கரிமூலம் காலனின் கணக்குக்கு இரையானவன்! கண்ணனைக் கொண்டாடிய கண்ணம்மாவின் காதலன்அண்ணலுக்குக்கும் அதிகார அழைப்பு விடுத்தவன்தண்ணிலவுக் கதிராகித் தகைசால் தரணியுளோர்எண்ணத்தில் இமயமென என்றென்றும் உயர்ந்தவன்! மெல்லத் தமிழினிச் சாகும் என்றவனைவில்லடிபோல வீரம்புகளால் விரட்டும் வித்தையால்சொல்லடி கொடுத்துச் சோர்வுறச் செய்தவன்பல்லுயிரும் போற்றியே வணங்கும் பாரதி….நீ என்றும் எங்கள் பாரதத்Continue reading “இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – பாரதி பிறந்தநாள்!”
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – காலடி தரிசனம்
    மஹான் ஆதி சங்கரர் அவதரித்த புண்ணிய பூமியான, காலடிக்கு வரும் பாக்கியம் இன்று கிட்டியுள்ளது. எங்கள் பெரியப்பா மகனுக்கு, அங்கு சிருங்கேரி மடத்தில் வைத்து, பீமரத சாந்தி இன்றும் நாளையும் நடக்கிறது. மிகவும் அருமையான நொடிகளாக அனுபவிக்க முடிகிறது. மிகவும்ரம்யமான சூழ்நிலை. வணிக ரீதியில் இல்லாமல், ஆத்மார்த்தமாக செய்து கொடுக்கிறார்கள். சங்கரருடைய,எத்தனையோ பாடல்களும், ஸ்லோகங்களும் இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த நிர்வாண ஷதகமும், மாத்ரு பஞ்சகமும், அவருடைய சன்னதியில் படித்து ஆனந்தம் அடைந்த கணம், விவரிக்க முடியாதContinue reading “இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – காலடி தரிசனம்”
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கார்த்திகை திருநாள்!
    கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உகந்தது அக்னி ஸ்வரூபத்தில் அண்ணாமலையான சிவனுக்கு உகந்தது! அர்த நாரியாய் அண்ணலுடன் கலந்த அன்னைக்கு உகந்தது இம்மூவருக்கும் உகந்தது என்றால், முழு முதற்கடவுள் முந்தி விநாயகனுக்கும் உகந்ததுதானே! இத்தகைய இனிய திருநாளில் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ! மாந்தளிர் அழகுடன் மாணிக்க ஒளியுடன்பூந்துகில் உடையுடுத்தி பூதங்களுள் ஒன்றானவேந்தன் என்றாகிநல் வேதங்கள் முழங்கிடசாந்தம் நிறைபுவியாக்கி சரித்திரம் படைத்திடுவோம்
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருச்செந்தூர்
    இன்று கந்த சஷ்டி. மாலை சூர ஸம்ஹாரம்.தலையலையில் செந்தூர் தரிசனம்.மனித நம்பிக்கையின் உச்சம் பக்தி.ஆறுமுகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி, குமரன் இருக்கும் அனைத்து இடங்களிலும் கோலாகலம். நாம் கேட்பதெல்லாம் அளிப்பதோடு, அவன் கருணை உள்ளத்துடன் நமக்குத் தெரியாத நம் தேவைகளையும் பூர்த்தி செய்வான் நாமும் இருக்கும் இடத்திலேயே அரோகரா கோஷம் எழுப்பி அவன்தாள் பணிவோம். மலைக்குற மகளை மணந்தஅலைகடல் அருகன்சிலையெனை மட்டுமே இல்லாதுவிலையிலா வரமளித்து வாழ்த்திடுவான்!
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – சிக்கல்
    சஷ்டி விழாவின் 5 ம் நாள். சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் என்பது வழக்கு. வசிஷ்டர் வெண்ணையால் பிரதிஷ்டை செய்த லிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டதால், இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்ததாகக் கூறப் படுகிறது. நவநீத (வெண்ணெய்) ஈஸ்வரன் என்றும் வேல் நெடுங்கன்னி என்றும் அம்மையப்பனைக் கொண்ட அழகுக் குமரன் இங்கு சிங்காரவேலன் என்று அழைக்கப் படுகிறான். சூரனை ஸம்ஹாரம் செய்வதற்காக, அன்னை தன் சக்தியை வேல் வடிவில் வழங்கியதால், வேல்Continue reading “இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – சிக்கல்”
  • இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருவேரகம்
    இன்று சஷ்டி விழாவின் 4 – ம் நாள், வியாழக்கிழமையில் வந்துள்ளதால், முருகன் குருவாக உருவெடுத்த தலமாகிய, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை குறித்த திருப்புகழைக் கேட்டு மகிழ்வோம். தந்தையே ஆனாலும், குருவின் முன் எப்படிப் பணிதலுடன் கற்க வேண்டும் என்னும் ஞானத்தைக் கற்பித்த பாக்கியம் பெற்ற தலம்.அதனால் கந்தனுக்கு, தகப்பன் சாமி என்ற பெயரும் உண்டு.அறுபடை வீடுகளில் 4- வது தலம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப, சிறிய குன்று போல அமைக்கப்பட்ட இக்கோவிலில் உள்ளContinue reading “இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருவேரகம்”