பச்சை மலைப் பயணம் – 1

பழைய பயணத்தின் புதிய பதிவு!

இது திருச்சி அருகே உள்ள பச்சை மலை என்ற சுற்றுலாத் தலத்திற்கு சென்று வந்த பயண அனுபவம் குறித்த பதிவு!

சேர்ந்து பயணிப்போம்!

அவ்வப்போது, பேசுவதும் சிறிது சிறிதாய் எழுதுவது மட்டுமே பழக்கப்பட்ட எனக்கு இந்த பயணத்தின் அனுபவம் குறித்து நான் எழுத வேண்டும் என்று நண்பர் கிஷோரின் அன்பு கட்டளையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முயற்சி. கனிந்த பழமாக இனிக்க கடவுளை வணங்கி ஆரம்பிக்கிறேன் இசைந்து பயணிக்க ஆயத்தமாகுங்கள் தோழர்களே!

“பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பிரிந்து செல்கின்றோம் நாம் பிரிந்து செல்கின்றோம்.”

ஆம்! காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பிரிவிலும் இந்தப் பாடலைப் பாடுவதே தலைமுறை சம்பிரதாயமாக இருந்து வருகிறது.

ஆனால் எதுவும் நிரந்தரமில்லை என்றதொரு ஒரு உண்மையும் இருக்கும்போது பிரிவு மட்டும் விதிவிலக்காக முடியுமா? பிரிவுக்கு பிரிவு கொடுக்க நினைத்ததன் விளைவுதான் ib pals 1980-in what’s app group உதயம். !

பல மலரும் நினைவுகள், தற்போதய நனவுகள் என்று பகிரப் பட்டவைகளை நேரிலும் அனுபவிக்கும் ஆசை வந்தது.

சந்திப்போம், சங்கமிப்போம் என்ற தாகம், மோகமானதால் முனைப்புடன் களமிறங்கி பல்வேறு திட்டங்களைத் தீட்டியதன் விளைவில் உதித்த முத்து “பச்சைமலை” பரிசு! குழுவினர் இணைந்து பின் கரைந்த கணங்களின் கதைதான் இது.

குழுவினர் இணைந்து பின் கரைந்த கணங்களின் கதைதான் இது.

இரண்டு நாள் பயணம், எப்படியெல்லாம் இனிமையாக இருந்தது என்பதைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்!

2 Comments

  1. Adhi Venkat says:

    பச்சை மலைப் பயணத்தின் இனிமையான துவக்கம்!
    தொடர்ந்து நாங்களும் உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறோம்.

    Like

  2. பயணம் இனிமையாக துவங்கியிருக்கிறது. நாங்களும் தொடர்ந்து வருகிறோம்.

    Like

Leave a Comment